தாராபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூக்குண்டத் திருவிழா கோலாகலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காட்டூர்புதூர் பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் பத்தாம் ஆண்டு திருக்கல்யாண வைபவம் மற்றும் பூ குண்டத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காட்டூர்புதூர் கிராமத்தில் கட்டாளுர் வார்ளு என்ற குல மக்களின் குல தெய்வமான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவம் மற்றும் பூ குண்டத் திருவிழா வருட வருடம் வெகு விமர்சையாக அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய விழா குழுவினர் மற்றும் ஆலய சேவா டிரஸ்ட் மூலம் கொண்டாடி வருகின்றனர்.



அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா, தை மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மாசி 7 தேதி மலையனூரில் இருந்து சக்தி தீர்த்தம் கொண்டு வந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு செலுத்தி அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து கணபதி ஹோமம், ஜெப ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை சுவாமி அம்பாளுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு அம்மை அழைக்கப்பட்டு, திருக்கல்யாண வைபவம்நிகழ்ச்சி நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து, மாசி 8 தேதியான நேற்று காட்டூர் புதூர் பகுதியில் இருந்து அக்னி விந்தை அழைத்தனர்.



பின்னர், கோவில் முன்பாக உள்ள அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



பின்னர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, அபிஷேகம் மற்றும் தீபாராதனை, பிள்ளை பாவை எடுத்தல், விசேஷ அபிஷேகம், அன்னாபிஷேகம்செய்யப்பட்டு பின்னர் அலங்கார சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வருகை புரிந்த பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...