வழக்கில் ஆஜராகாத அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவர், சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு தலா ரூ.10,000 செலுத்த உத்தரவு

குன்னூரில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - திமுகவினர் மோதிக் கொண்ட வழக்கு விசாரணையில் ஆஜராகாத அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்பட மூவர், எடப்பள்ளி பகுதியில் உள்ள சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு தலா ரூ.10,000 மாவட்ட நீதிபதி உத்தரவு.


நீலகிரி: நீலகிரியில் வழக்கு விசாரணையில் ஆஜராகாத அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரும் தலா ரூ.10,000 செலுத்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குன்னூர் அருகே வெலிங்டன் கண்டேண்மெண்ட் போர்டில் 7 வார்டுகள் உள்ளன. இந்த போர்டுக்கு ராணுவ அதிகாரி தலைவராக இருக்கும் நிலையில் துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு நியமனம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 3 அதிமுக கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் திமுக துணை தலைவருக்கு ஆதரவாக வாக்களிக்க சென்றனர்.

அப்போதைய குன்னூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கா.ராமசந்திரன் மற்றும் குன்னூர் நகர் மன்ற உறுப்பினர் ராமசாமி மற்றும் திமுக கவுன்சிலர் வினோத் ஆகியோர் அழைத்து சென்ற போது ஆத்திரமடைந்த அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதுடன் கண்டோண்மெண்ட் அலுவலகத்தையும் சேதப்படுத்தினர்.

அந்த சம்பவத்தில் அப்போதைய கண்டோண்மெண்ட் துணை தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த பாரதியார் உள்பட அதிமுகவினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் திமுக தரப்பில் கா.ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனையடுத்து அமைச்சர் கா.ராமசந்திரன், அப்போதைய கண்டோண்மெண்ட் கவுன்சிலர் வினோத் மற்றும் அதிமுகவை சேர்ந்த பாரதியார் ஆகியோர் குன்னூர் அடுத்த எடபள்ளியில் உள்ள சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு தலா ரூ.10,000 செலுத்த உத்தரவிட்டார்.

மேலும் அடுத்த வழக்கு விசாரணைக்கு கட்டாயமாக ஆஜராக வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...