கோவையில் பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு

கோவை போத்தனூர் பகுதியில் பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தை இன்று திடீரென இறந்தது. குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


கோவை: போத்தனூர் பகுதியில் பிறந்து 20நாளில் குழந்தை இறந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர்களை ராகுல்-மனீஷா(25). இவர்கள் கோவை சுந்தராபுரம் காமராஜர் நகரில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மனீஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 14ஆம் தேதி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மனீஷா வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் குழந்தை மூச்சு, பேச்சின்றி அசைவற்ற நிலையிலிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனீஷா மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...