மாநில அளவில் மது விற்பனையில் கோவைக்கு 3 ஆவது இடம்

தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டதில் காஞ்சிபுரம் முதலிடத்தையும், கோவை மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.


கோவை: மது விற்பனையில் கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளில், காஞ்சிபுரம் வடக்கு கலால் மாவட்டத்தில், தினமும் சராசரியாக 4.93 கோடி ரூபாய்க்கும், தெற்கு கலால் மாவட்டத்தில் 4.47 கோடி ரூபாய்க்கும் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அளவில் 9.40 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனையாகி வருகிறது. இதற்கு அடுத்த இடத்தில் சென்னையில் ரூ.9.07 கோடிக்கு தினசரி மது விற்பனையாகிறது.

கோவை வடக்கு கலால் மாவட்டத்தில் 166 மதுபான கடைகளில் தினமும் சராசரியாக 5092 பெட்டி இந்தியத் தயாரிப்பு மற்றும் அந்நிய மதுபானங்களும், 2,654 பீர் பெட்டிகளும் எனத் தினமும் 4.54 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தெற்கு கலால் மாவட்டத்தில் 139 மதுபான கடைகளில் 5,221 இந்தியத் தயாரிப்பு, அந்நிய மதுபான பெட்டிகளும், 2,090 பீர் பெட்டிகளும் விற்பனையாகி வருகிறது. தினமும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு 4.07 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகிறது.

கோவை மாவட்டத்தில் 305 மதுபான கடைகளின் மூலமாக 8.61 கோடி ரூபாய்க்குத் தினசரி வருவாய் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில், திருவள்ளூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளது. வழக்கமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் திருப்பூர் மாவட்டம் மது விற்பனையில் 2 அல்லது 3ஆவது இடத்தில் நீடித்து வந்தது.

பனியன் நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் வேலை இழப்பு காரணமாக மதுபான விற்பனை குறைந்து வருவது தெரியவந்துள்ளது. திருப்பூரில் தினசரி மதுபான விற்பனை 6.21 கோடி ரூபாயாக இருக்கிறது.

கடந்த ஆண்டில் 8 கோடி ரூபாய்க்கு அதிகமாக மதுபானம் விற்பனையாகி வந்தது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை உச்சத்தில் இருக்கிறது. விவசாய தொழில் அதிகமாக நடக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 159 மதுபான கடைகள் மட்டுமே இருக்கிறது.

இங்கு 5.20 கோடி ரூபாய்க்குத் தினமும் மதுபானம் விற்பனையாகிறது. குறைந்த கடைகள் இருந்த போதிலும் அதிகளவு மதுபானம் விற்பனை நடப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...