கோவையில் மத நல்லிணக்க மருத்துவ முகாம் - மகளிர், முதியோர் பங்கேற்பு

கோவையில் மனிதநேயத்தை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட மதநல்லிணக்க மருத்துவ முகாமில் பெண்கள், முதியோர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


கோவை: மத நல்லிணக்கம், மனிதநேயம் வலியுறுத்தி வழக்கமாக கூட்டம், கருத்தரங்கம், நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், கோவை சற்று வித்தியாசமாக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மத நல்லிணக்க மனிதநேய மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் எல்.சி.மருத்துவமனை அறக்கட்டளை இணைந்து இலவச எண்டோஸ்கோபி ஸ்கிரீனிங் மற்றும் மகளிர் நலம் தொடர்பான மருத்துவ முகாம் நடத்தினர்.



பேரூர் சாந்தலிங்க மருத்தாச்சல அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் இந்த முகாம் நடத்தப்பட்டது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், எல் சி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்கள் வித்யா, ராஜன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.



நவீன உலகில் மாறிவரும் வாழ்வியல் நடைமுறையில் எண்ணற்ற இன்னலுக்கு பொதுமக்கள் உள்ளாகி வருகின்றனர். அதனடிப்படையில், சமீபத்திய பிரச்சனைகளில் வயிறு, இரைப்பை கோளாறு, வயிற்று ஹெர்னியா உள்ளிட்ட நோய்களும், மகளீர் நலன் சார்ந்த பரிசோதனைகளும் இந்த மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டது.

கட்டணமில்லாமல் நடத்தப்பட்ட இந்த முகாமில், பெண்கள், முதியோர் உட்பட பலர் பங்குபெற்று பயனடைந்தனர். தொடர்ந்து இதேபோல தமிழகம் முழுவதும் இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாமை நடத்தவுளளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...