திருப்பூர் உடுமலை அருகே மகன் நினைவாக அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய பெற்றோர்!

உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டியில் இறந்த மகனின் நினைவாக 10 லட்சம் ரூபாயை அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக வழங்கிய தாய் நாகரத்தினத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இறந்த மகன் நினைவாக அரசு பள்ளி மாணவர்கள் கல்விக்காக ரூ.10 லட்சம் நிதியாக வழங்கிய பெற்றோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



பல்லடம் அருகேயுள்ள பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர்கள் மோகன் குமார் - நாகரத்தினம் தம்பதி. இவர்களுக்கு விஷ்ணு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார்.

இந்நிலையில் மகன் விஷ்ணு பிரசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்த தந்தை மோகன் குமாரும் உடல் நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், மகன் இறந்த நிலையில் அவரது ஆயுள் காப்பீட்டில் இருந்து தாய் நாகரத்தினத்திற்கு ரூ.10 லட்சம் கிடைத்துள்ளது.



இந்த பணத்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக வழங்கியுள்ளார்.

இதற்கான உயில் ஒன்றையும் பள்ளியின் பெயரில் எழுதி வைத்துள்ளார். அதில், தனது மகனின் காப்பீட்டு தொகையான 10 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டி தொகை ஆண்டுதோறும், மகனின் பிறந்த நாளான ஜூன் 1ஆம் தேதி பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்படும்.

இதனையடுத்து தமது காலத்துக்கு பிறகு அந்த தொகையானது முழுமையான பள்ளியின் புரவலர் நிதியில் சேர்க்கப்படும் என உயில் எழுதி வைத்துள்ளார்.



இந்த உயிலை முறையாக பதிவு செய்து அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்பக்கனியிடம் ஒப்படைத்தார். அப்போது அவருடன் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் சோமசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...