திருப்பூரில் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா பறிமுதல்! - ஒருவர் கைது

திருப்பூர் அடுத்த அறிவொளி நகர் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரணை.



திருப்பூர்: திருப்பூர் அருகே போலீசாரின் சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் அருகேயுள்ள அறிவொளி நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் அப்பகுதியில் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதன் பேரில் கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர சோதனையை மேற்கொண்டனர்.



அப்போது அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வீட்டின் உரிமையாளரான உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிராம் மிஸ்ரா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...