மேட்டுப்பாளையத்தில் சிறுதானிய உணவுக் கண்காட்சி - ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவ-மாணவியர்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நடந்த சிறுதானிய உணவு கண்காட்சியில் சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, மற்றும் தானிய பயிர் வகைகள் குறித்து பல்வேறு உணவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவுகள் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.



இந்த கண்காட்சியில், நாகரீக வாழ்க்கையில் நாம் மறந்து போன நமது பழமையான உணவு பழக்க வழக்க முறைகளாக இருந்துவந்த சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, மற்றும் தானிய பயிர் வகைகள் குறித்து பல்வேறு உணவுப்பொருட்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருத்தது.



கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த கண்காட்சியில், சுமார் 25 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 30க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் மற்றும் நமது பாரம்பரிய நாட்டு மருந்து என்ற அடிப்படையில் உள்ள பிரண்டை, ஆவாரம்பூ, தூதுவேளை, நெல்லிக்கனி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.



இந்த கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். முன்னதாக, இந்த கண்காட்சியினை ஆச்சி மசாலா கல்வி குழும நிர்வாக அதிகாரி ஸ்டான்லி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரூபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...