'குறிப்பிட்ட தொழில் அதிபர்களை மோடி அரசு வளர்த்து விடுகிறது..!' - காங்., எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைப்பயணம், அரசியல் வரலாற்றில், மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் தேசிய தலைவர் ராஜேஷ் லிலோத்தியா தெரிவித்துள்ளார்.



கோவை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களை வளர்க்கும் விதமாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவின் தலைவர் ராஜேஷ் லிலோத்தியா தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி,எஸ்.டி பிரிவின் தேசிய தலைவர் ராஜேஷ் லிலோத்தியா விமானம் மூலம் கோவை வந்தார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைப்பயணமான பாரத் ஜோடோ யாத்திரை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும், இந்தியாவில் தற்போது நிலவி வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துவதால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணமாக ராகுல் காந்தியின் நடைப்பயணம் இருந்தது.



தொடர்ந்து பேசிய அவர், அரசியல் வரலாற்றில் பாரத் ஜோடோ யாத்திரை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களை வளர்க்கும் விதமாக செயல்படுவதாகவும், நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை தொழிலாளர்களின் நிலையைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.முன்னதாக கோவை விமான நிலையம் வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...