'ஊரைவிட்டு காலி செய்துவிட்டு எங்கே செல்வது..?' - பல்லடம் எம்.எல்.ஏ.,விடம் கிராம மக்கள் கேள்வி!

திருப்பூர் மாவட்டம், துத்தேரிபாளையம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் 500 குடும்பங்களை காலி செய்யும்படி அறிவிப்பாணை வழங்க வந்த அரசு அதிகாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தேரிபாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊரின் அருகில் 33 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை புறம்போக்கு இடம் அமைந்துள்ளது.



நீர்நிலை புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமித்து 63 குடும்பங்கள் வீடு கட்டியுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் கிராம மக்களுக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டது.

200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இடத்தைவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது என கூறி கிராம மக்கள், அங்கிருந்து காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வருவாய் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர் ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள வேண்டும் எனக்கூறி இரவில் அறிவிப்பாணை வழங்க வந்துள்ளார். அவரை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் அங்கு வந்த பல்லடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த பிரச்சனை தொடர்பாக துத்தேரிபாளையம் கிராம மக்கள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன் நேரில் சந்தித்தார்.

அப்போது, 200 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த கிராமத்தை விட்டு வெளியே போகச்சொன்னால் நாங்கள் எங்கே செல்வது? என்று கேட்ட கிராம மக்கள், எங்களுக்கு பட்டாக்கூட வேண்டாம், இருக்கும் இடத்தில் வாழவிட்டால் போதும் என்று கூறினர்.



மேலும், தற்பொழுது நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லப்படும் இடமானது, மந்தைவெளி புறம்போக்காக வருவாய்த்துறை மாற்றம் செய்யாமல் இருப்பதாகவும், வருவாய்த்துறை மீண்டும் கிராமத்தை ஆய்வு செய்து நீர்நிலை புறம்போக்கு என்று சொல்லப்படும் இடத்தினை மந்தைவெளி புறம்போக்காக வகைப்பாடு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் எம்.எல்.ஏவிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

காமராசர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், ஐந்து கோவில்கள், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் என அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டுள்ள நிலையில், காலங்காலமாக இங்கேயே வசித்து வரும் எங்களுக்கு மட்டும் இடம் இல்லையா? என வேதனை கேட்ட மக்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சட்டமன்ற உறுப்பினரிடம் அளித்தனர்.

மனுவினைப் பெற்றுக்கொண்ட பல்லடம் எம்.எல்.ஏ, சம்பந்தப்பட்ட இடத்தினை மந்தைவெளி புறம்போக்காக வகைப்பாடு மாற்றம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...