அடம்பிடித்து நீலகிரி ஆட்சியர் மடியில் அமர்ந்த 'சேட்டை' குழந்தை - வைரல் வீடியோ

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் வாகனத்தில் அடம்பிடித்து ஏறிய அர்ஷத் என்ற குழந்தை, ஆட்சியர் மடியில் அமர்ந்து இறங்க மறுத்து சுட்டித்தனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றார். அந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு தனது வாகனத்தில் ஏறியபின், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகளோடு கலந்துரையாடினார்.

பின்பு ஆட்சியரின் வாகனத்தை ஓட்டுநர் இயக்க ஆரம்பித்துள்ளார். அப்பொழுது அர்ஷத் என்ற குழந்தை ஆட்சியரின் வாகனத்திற்குள் ஏறியே ஆகவேண்டுமென அடம்பிடித்துள்ளது.



உடனடியாக குழந்தையை ஆட்சியர் அம்ரித் வாகனத்தில்ஏற்றி, தனது மடியில் வைத்துக் கொண்டார். ஆட்சியர் என்று தெரியாமல் அழகாக அவர் மடியில் அமர்ந்து கொண்ட குழந்தை, பின்னர் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்து அடம்பிடித்துள்ளது. வேறு வாகனம் வந்துவிட்டது. அதில் செல்லலாம் என்று அழைத்தபோதும் குழந்தை, மாவட்ட ஆட்சியரின் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்து மறுத்துவிட்டது.



ஆட்சியரின் வாகனத்தின் கதவு திறந்திருந்த போதிலும் அந்தக் கதவை நைசாக அடைத்து பின் கதவுகள் திறக்காமல் இருக்க பயன்படுத்தப்படும் லாக்கை அழுத்தி ஆட்சியருடன் செல்ல அடம்பிடித்தது. அப்போது, ஆட்சியர், வேறு வாகனத்தில் செல்லலாம் என கூறி தானும் இறங்குகிறேன் என்று கூறிய பின்னரே அந்தக் குழந்தை வாகனத்தில் இருந்து இறங்கியது.

குழந்தையின் இந்த சுட்டித்தன வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...