மேட்டுப்பாளையத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகியின் கார் தீவைத்து எரிப்பு - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி சையது முகமது அலி, தனது வீட்டு முன்பு நிறுத்திய காரை காரை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர். கார் எரிக்கப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: மேட்டுப்பாளையத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி காரை எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிவன்புரம் காலனி, வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி.

இவர் திமுகவின் தொழிற்சங்கமான எல்.பி.எப் அமைப்பில் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். மேலும், இவர் கார்களை வாங்கி விற்கும் தொழில் மற்றும் வாடகை கார் ஓட்டும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சையது முகமது அலி, தனது வீட்டின் முன்பு மகேந்திரா கார் ஒன்றை நேற்று விற்பனைக்காக நிறுத்தி வைத்திருந்தார்.



இன்று காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, அந்தக் கார் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காரமடை போலீசாருக்கு தகவல் அளித்தார்.



சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார் எரிக்கப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்து, தீவைத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் வாடகை கார் நிறுத்துவதில் அங்குள்ள சிலருக்கும் சையது முகமது அலிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...