கோவை அருகே விமானப்படை அதிகாரியின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

கோவை பொம்மனம்பாளையத்தை சேர்ந்த ஓய்வுப்பெற்ற விமானப்படை அதிகாரி சகஸ்ரநாமம் என்பவர் இறந்து 4 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை.


கோவை: கோவை வடவள்ளி அருகே ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனம்பாளையம் டான்சா நகரைச் சேர்ந்தவர் சகஸ்ரநாமம் (70). இவர் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றிக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். சகஸ்ரநாமம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எங்கு இருந்து துர்நாற்றம் வருகிறது எனப் பார்த்தனர்.

அப்போது சகஸ்ரநாமம் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை போலீசார் கண்டு பிடித்தனர். அவரது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து போலீசார் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.

வீட்டிற்குள் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி இறந்து கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று சகஸ்ரநாமம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...