குப்பைகளை தரம்பிரித்து சேகரித்த தூய்மைப் பணியாளர் - பாராட்டி பரிசு வழங்கிய கோவை ஆணையர்!

கோவை மாநகராட்சியில் அதிகளவு குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்த தூய்மை பணியாளர் வெண்ணிலா என்ற ஊழியரை, ஆணையர் மு. பிரதாப் நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்து பரிசு வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி அறிவுறுத்தியது. மேலும், ஒவ்வொரு வார்டுகளிலும் தெருக்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்து அகற்றி வருகின்றனர்.



குப்பைகள் முறையாக தரம் பிரித்து பெறப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று ஆய்வுகளும் செய்து வருகிறார். இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சிவதங்கம் நகர் பகுதியில் அதிக அளவிலான குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்த தூய்மை பணியாளர் வெண்ணிலா என்ற ஊழியரை, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பாராட்டி பரிசு வழங்கினார்.



அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மற்ற தெருக்களில் எவ்வாறு குப்பைகள் சேகரிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும் என அப்போது அவர் அறிவுறுத்தினார். மேலும், அதே பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளையும் ஆணையர் பிரதாப் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி சோமசுந்தரம், மரியராஜ் மற்றும் உதவியாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...