நல்லது நடக்க தமிழக, கேரள எம்.பி.க்களே காரணம்..! - ஈரோட்டில் எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு!

நாடாளுமன்றத்தில் நடக்கும் நல்லவைகளுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் எம்.பிக்களால் மட்டுமே காரணம். ஆந்திரா,தெலங்கானா எம்.பிக்கள் அவர்களின் குரலாய் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எம்.பிக்களை குரல் எழுப்ப சொல்வதும் நிகழ்ந்து வருவதாக எம்பி சு.வெங்கடேசன் பேச்சு.


திருப்பூர்: திருப்பூர் அரிசி கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.



இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக எம்.பி.க்களான கோவையைச் சேர்ந்த பி. ஆர்.நடராஜன், மதுரையை சேர்ந்த சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



இந்த மாநாட்டில் பேசிய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், பருத்தி விலை உயர்வதால் நூல் விலை உயர்ந்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பருத்தி விலை உயர்ந்தபோதும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவில்லை. இடைத்தரகர்கள் மட்டுமே உயர்ந்துள்ளனர்.

திருப்பூரின் தொழில் நிலையை உயர்த்த சட்டமன்றம், மக்களவை, மாநிலங்களவை என அனைத்து மன்றங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். இன்னும் நாடாளுமன்றத்தில் நல்லவை நடக்கிறது என்றால் அது கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில எம்பிக்களால் மட்டுமே.

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் அவர்களின் குரலாய் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எம்.பிக்களை குரல் எழுப்ப சொல்வதும் நிகழ்ந்து வருகிறது, என்றார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் டீமா முத்துரத்தினம் உள்ளிட்ட தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...