ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் - முறுக்கு விற்று ஆதரவு திரட்டிய அமைச்சர்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் முறுக்கு கடையில், பொதுமக்களுக்கும் உடன் வந்த கட்சியினருக்கும் முறுக்கு விற்பனை செய்தவாறு கடை உரிமையாளரிடம் ஆதரவு திரட்டினார்.


ஈரோடு: திமுக அரசின் சாதனை திட்டங்களுக்கு முத்தாய்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி, திமுக கூட்டணி தொண்டர்கள் முனிசிபல் காலனி பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



அப்போது முறுக்கு தயாரிக்கும் கடையில் வாக்கு சேகரித்த அமைச்சர், அங்கிருந்த முறுக்கு பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கும், உடன் வந்த கட்சியினருக்கும் விற்பனை செய்தவாறு கடை உரிமையாளரிடம் ஆதரவு கோரினார்.

அப்போது செய்திகாளர்களிடம் செஞ்சி மஸ்தான், தேர்தல் குறித்து பகிர்ந்துகொண்டார். திமுக அரசின் சாதனைகளை மக்கள் மனம் திறந்து பாராட்டுவதாகவும், பெண்கள் மீது அக்கறையுள்ள ஆட்சியாக திகழ்வதாக மக்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

திமுக அரசின் சாதனை திட்டங்களுக்கு முத்தாய்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான அரசாக திகழ்வதாகவும், அதிமுகவினர் இதனை மாற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதாகவும், திமுக கூட்டணி சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் கொள்கை கூட்டணி என்றும், அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் கூறினார். டெல்லிக்கு அடிமைத்தனமாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, அடிமைத்தனமாகக் கட்சி நடத்தி வருவதாகவும் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...