திருப்பூர் அருகே தண்ணீர் ட்ரம் திருட்டு - வைரலாகும் வீடியோ

திருப்பூர் அருகே காளம்பாளையத்தில் மோகன் என்பவரின் வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்க வைத்திருந்த பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை, இரவு நேரத்தில் மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.



திருப்பூர்: காளம்பாளையத்தில் தண்ணீர் ட்ரம்மை மர்மநபர்கள் திருடிச் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் அருகேயுள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் தனது வீட்டின் முன்பு தண்ணீர் நிரப்பி வைக்க பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை வைத்திருந்தார். இன்று அதிகாலை தண்ணீர் நிரப்ப வந்த பொழுது ட்ரம்மை காணவில்லை.



இதனையடுத்து அருகில் தேடிய அவர், வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொழுது, அதில் மர்மநபர் ஒருவர் பிளாஸ்டிக் ட்ரம்மை தூக்கிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து அந்நபரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...