வளர்ப்பு கால்நடைகளை சொத்தாக குறிப்பிட்ட முன்னோர்கள் - உடுமலையில் கிடைத்த கல்வெட்டில் தகவல்!

உடுமலை அடுத்த பெரியபாப்பனூத்து பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளில், வளர்ப்பு கால்நடைகளை சொத்துக்களாக எழுதி வைத்ததும், நினைவு நடுகற்கள் வைத்து வழிபட்டதும் தெரியவந்துள்ளதாக வரலாற்று ஆய்வு குழு தகவல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிடைத்துள்ள பழங்கால கல்வெட்டுகள் மூலம் கால்நடைகளை சொத்துக்களாக எழுதி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தளி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ளன. உடுமலை பகுதியில் வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்து, பதிவு செய்யும் பணியில், உடுமலை வரலாற்று ஆய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.



அதன்படி வீரநாராயண பெருவழி, கொங்கப்பெருவழி மற்றும் உடுமலை ஆகிய இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.



குறிப்பாக, கோட்டமங்கலம், நீலம்பூர், மெட்ராத்தி போன்ற இடங்களில் கல் திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆய்வுக்குழுவினர் கூறியதாவது:

தற்போது, பாலக்காட்டுக் கணவாய் எனும் ஆனைமலை வழியாக செல்லும் பெருவழியான, பெரிய பாப்பனூத்து கிராமத்தில் மிகப்பெரிய அளவிலான பாறைக்கற்களும், சிதிலமடைந்த இடுதுளை உள்ள பாறைகளும் உள்ளன.

சிறு அளவிலான கற்களில், 'தமிழி' எழுத்தில் கல்வெட்டு எழுத்துகளும் உள்ளன. இது 15 அல்லது 16ஆம் நூற்றாண்டுகளில், கோவிலுக்கு எழுதி வைத்ததற்கான கல்வெட்டுச் சான்றுகளாக இருக்கலாம்.

பெரியபாப்பனூத்துக்கு அருகில் கெடிமேடு பகுதியில் நிலைக்கற்கள் உள்ளன. மேய்ச்சல் நிலங்களில், ஆடுகளையும் மாடுகளையும், கோழிகளையும், சேவல்களையும் தன்னுடைய சொத்துகளாக கருதி வளர்த்துள்ளனர்.

மேலும், கால்நடைகளுக்காக கல்வெட்டுகளையும், நினைவு நடுகற்கள் வைத்தும் வழிபட்டு வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். தமிழக அரசு இதுபோன்ற ஆய்வில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...