கோவையில் தொடரும் வன்முறைகள் - ரவுடிகள் பட்டியலை தயாரிக்கும் போலீசார்

கோவை மாநகரில் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கடந்த 2 தினங்களாகவே மிகுந்த பதற்றத்துடனேயே காணப்படுகிறது. அதிலும் ஒரு கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதால், ரவுடிகளின் பட்டியலை போலீசார் எடுத்து வருகின்றனர்.


கோவை: கோவையில் தொடரும் வன்முறைகள் அடக்க போலீசார் கோவை மாநகர் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியில் நேற்று முன்தினம் மதுரையைச் சேர்ந்த சத்தியா பாண்டியை 5 பேர் கும்பல் அரிவாள், துப்பாக்கியுடன் ஓட, ஓட விரட்டி சென்றனர். வீட்டிற்குள் சென்று பதுங்கிய சத்தியா பாண்டியை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதேபோல் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த கோபாலபுரம் பகுதியில் கோவில்பாளையத்தைச் சேர்ந்த கோகுலை பழிக்குப்பழியாக 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.

இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களைத் துணை கமிஷனர் சந்திஷ் தலைமையிலான தனிப்படையினர் தேடி வருகின்றனர். கோவை மாநகரில் சினிமா பாணியில் ரவுடிகள் கும்பலாக பிரிந்து மோதுவது தொடர் கதையாகி வருகிறது.

ஒரு கும்பலை சேர்ந்தவர்கள், எதிர் கும்பலைச் சேர்ந்தவர்களை வெட்டுவதும், பதிலுக்கு அவர்கள் வெட்டுவதும் என மோதல் நடந்து வருகிறது. குறிப்பாகக் கண்ணப்ப நகர், மோர் மார்க்கெட், ரத்தினபுரி, சித்தாபுதூர், செல்வபுரம், சரவணம்பட்டி பகுதிகளில் அதிகளவில் ரவுடி கும்பல் உள்ளன. இவர்கள் வாகனம் பறிமுதல், கஞ்சா விற்பனை, ரியல் எஸ்டேட் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த தொழில் போட்டியில் தான் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி மோதி கொள்வார்கள். இதுதவிர ஆங்காங்கே சில கத்திக்குத்து சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களும் நடந்து வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய அளவில் நடந்து வந்த நிலையில் தற்போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது,மக்கள் நிறைந்த இடத்தில் கொலை செய்வது என வன்முறை சம்பவம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதையடுத்து போலீசார் கோவை மாநகர் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த பகுதி போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலைச் சேகரித்து வருகிறார்கள். இதில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் சம்பந்தப்பட்டவர்களைக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கைது செய்து, அவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது போலீசார் அதற்கான பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...