உடுமலையில் தளி எத்தலப்ப நாயக்கருக்கு நினைவு அரங்கம் - முதல்வர் அடிக்கல் நாட்டல்!

கடந்த அதிமுக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் தளி எத்தலப்ப நாயக்கருக்கு சிலை மற்றும் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் தளி எத்தலப்ப நாயக்கருக்கு திருவுருவ சிலை மற்றும் நினைவு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.10லட்சம் மதிப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கர் திரு உருவச் சிலையும், திருமூர்த்திமலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.



இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.



இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகர மன்ற துணைத் தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்குக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிலை மற்றும் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அப்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜு சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் சிலை மற்றும் நினைவு அரங்கம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மூலம் உடுமலை பகுதி வரலாற்று ஆய்வு மையநிர்வாகிகள், வீரபாண்டிய கட்டபொம்மன் கழகம் நிர்வாகிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...