திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுபோய் விட்டது..! - கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தற்போது கவனம் முழுக்க ஈரோடு மாவட்டத்தின்மேல் வைத்துள்ளதை விடுத்துவிட்டு, மற்ற மாவட்ட மக்களின் சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை பற்றியும் அரசாங்கம் யோசித்தால் நன்றாக இருக்கும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிவுரை.


கோவை: கோவையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள நோய் தொற்று இல்லா சூழலை உருவாக்கும் திட்டம் குறித்தான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில், நோய் தடுப்பை பலப்படுத்துதல், மற்றும் கழிவு நீர் மேலாண்மை மேம்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தேசிய உற்பத்தி மைய இயக்குனர் சந்திப் குமார் நாயக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாவட்ட தொழிலதிபர்கள் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:



மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழாக கோவையில் உள்ள மருத்துவமனைகள் குறிப்பாக செவிலியர் மாணவ-மாணவிகளுக்காக ப்ராஜெக்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நோய் தொற்றுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது, நோய்தொற்றுகள் இல்லா சூழ்நிலைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு விஷயங்களை கோவையில் உள்ள பத்து மருத்துவமனைகளுக்கும் செவிலிய மாணவிகளுக்கும் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் முதல் முறையாக கோவையில் சேம்பர் ஆஃப் காமர்ஸை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 25 லட்சம் அளித்து இதனை துவக்கி உள்ளோம். இதன் வாயிலாக கோவையில் உள்ள மருத்துவமனைகளில் நோய் தொற்று இல்லாத பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும்.

இன்று மாலை கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். நீதியை வாங்க முடியும் என்று மக்கள் நம்புகின்ற நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலேயே கொலை சம்பவம் நடப்பது என்றால் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கெட்டுப் போய் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இதற்கு முன்பாகவும் இது போன்ற தொடர் குற்றச்சாட்டுகளை நாங்கள் முன்வைத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் தற்பொழுது கவனம் முழுக்க ஈரோடு மாவட்டத்தின்மேல் வைத்துள்ளதை விடுத்துவிட்டு, மற்ற மாவட்ட மக்களின் சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை பற்றியும் அரசாங்கம் யோசித்தால் நன்றாக இருக்கும். ஆனால், இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் உள்ளதா என தெரியவில்லை. தற்பொழுது அரசாங்கத்தில் புதிய திட்டங்கள் ஏதேனும் வந்தால் அது மாப்பிள்ளை வீட்டுக்கு போக வேண்டும். அங்கிருந்து கிளியரன்ஸ் வாங்க வேண்டும். பின்பு அதில் யாரை ஈடுபடுத்த வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கில் மாநில அரசு கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளில் மின்சாரத்தை எடுத்துக் கொண்டோமேயானால் இலவசமாக தருவதை நிறுத்த வேண்டாம் என்ற போதிலும், யாருக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை கூறுங்கள் என்று தான் கேட்கிறோம். மத்திய அரசு கூறியதற்காக வரியை உயர்த்துகிறோம் என்று மாநில அரசு செயல்படுத்துகிறது.

எதற்கெடுத்தாலும் ஆர்எஸ்எஸ் பின்னணியில் உள்ளது என கூறினால் ஆமாம் உண்மைதான் ஆர்எஸ்எஸ் பின்னால் உள்ளது, பிரதமர் பின்னாலும் ஆர்எஸ்எஸ் உள்ளது தற்பொழுது உள்ள மந்திரிகள் பின்னாலும் ஆர்எஸ்எஸ் உள்ளது அனைத்து எம்எல்ஏ, எம்பிக்கள் பின்னாலும் ஆர்எஸ்எஸ் உள்ளது அதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?.

ஆர்எஸ்எஸ் என்ன தீவிரவாத இயக்கமா? அல்லது மக்களை குண்டு வைத்து கொல்கின்ற இயக்கமா? ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக கலாச்சார இயக்கம். அதனை புரிந்து கொண்டு இனிமேல் பேசினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...