வால்பாறையில் பக்கத்து வீட்டுக்காரரின் பைக்கை சேதப்படுத்தி ரகளை - போதை இளைஞர் கைது!

கோவை மாவட்டம் வால்பாறையில் கருமலை எஸ்டேட்டை சேர்ந்த முனியசாமி, அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் இருசக்கர வாகனத்தை அடித்து சேதப்படுத்தியுள்ளார். தட்டிக்கேட்ட பெண்ணின் கையையும் அடித்து உடைத்த போதை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் வேலை செய்து வரும் மாடசாமி. இவரது மகன் முனியசாமி (வயது 26) மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் அருகே உள்ள பாலமுருகன் என்பவரிடம், அவரது பைக்கை கேட்டுள்ளார். அப்போது அவர், தனது பைக்கை தர மறுத்ததால் கோபமடைந்த முனியசாமி, பைக்கை கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்.

இது குறித்து கேள்வி எழுப்பிய பாலமுருகனின் அப்பா அம்மாவையும் தாக்கிய முனியசாமி, அம்மாவின் கையையும் உடைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பாலமுருகன் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...