வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதை கண்டித்து உதகையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தி உதகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில், வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை கண்டித்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பின் வடமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுமானம், தொழிற்சாலைகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்கள் வருகையால் தமிழக தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலில் மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில் தற்போது கட்டுமானம் மற்றும் கேரட் தொழில்களிலும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் மலை மாவட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.



இந்நிலையில், உதகையில் இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினருடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் நிறுவன முதலாளிகள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும் குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே வருவதால் வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அமைப்பு சாரா தொழிலாளர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...