மேட்டுப்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்தில் கேஸ் கசிவு - மூச்சுத் திணறால் ஏற்பட்டு பொதுமக்கள் மயக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென குளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மயக்கமடைந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, அங்குள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு,33 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அப்படி சுத்திகரிப்பு செய்யும் போது தண்ணீரினை சுத்தம் செய்ய குளோரின் சரியான விகிதத்தில் நகராட்சி ஊழியர்களால் கலக்கப்படும். அந்த வகையில், இன்று காலை தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய குளோரின் சிலிண்டரை அங்குள்ள ஊழியர்கள் திறந்தபோது, அது பயங்கர சப்தத்துடன் வெடித்து குளோரின் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.



இதனால், அங்கு குடியிருக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிலர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மயக்கமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாயுக் கசிவினைசரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அடிக்கடி சிறிய அளவில் வாயுக் கசிவு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது பெரிய அளவில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஏற்பட்டுள்ளதாகவும், நகராட்சி ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள்கூட வழங்கவில்லை எனவும்கூறி அந்த பகுதி மக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...