மேட்டுப்பாளையம் அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

கோபனாரி பிரிவு வனப்பகுதி அருகே மாடுமேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை, வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.



கோவை: வெள்ளியங்காடு மூணுகுட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு மூணுகுட்டை பகுதியை சேர்ந்தவர் கருப்பாத்தாள் (59). கால்நடைகளை மேய்த்து வந்தார். இந்நிலையில் இன்று தனது மாடுகளை கோபனாரி பிரிவு வனப்பகுதி அருகே மேய்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது மாடுகள் தண்ணீர் தேடி அருகே உள்ள ஓடைக்குச் சென்றுள்ளது. இதையடுத்து மாடுகளை திருப்பிவிட கருப்பாத்தாள் வனப்பகுதிக்குள் சென்றபோது அங்குத் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை கருப்பாத்தாளை தாக்கியுள்ளது.



இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மற்றும் வன ஊழியர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

மேலும் காரமடை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கருப்பாத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...