கோவையில் ‘பொது போக்குவரத்தை பாதுகாக்க’ விழிப்புணர்வு மாரத்தான் - மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

கோவையில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் பொது போக்குவரத்தை பாதுகாக்க வலியுறுத்தி வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் பொது போக்குவரத்தை காக்க வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பூவுலகின் நண்பர்கள் மற்றும் இதர அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 22 இடங்களில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

அதன்படி கோவையிலும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில், "பொது போக்குவரத்தை பாதுகாக்க" என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. வ.உ.சி மைதானம் பகுதியில் இந்த மாரத்தான் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சாலை விபத்துகளை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பொதுப் போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்துதல், பலப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் இச்சங்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட CITU, SFI, ITDP, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இந்த மாரத்தான் போட்டியானது வ.உ.சி மைதானம் பகுதியில் துவங்கி, 5 கிலோமீட்டர் சுற்றி வந்து மீண்டும் அதே இடத்தில் முடிந்தது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...