தாராபுரம் அருகே கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை - பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறையினர் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டார பகுதியில் டீ கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரும்பாலான கடைகளில் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசு அனுமதி இல்லாத நிறுவனங்களே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கடைகளில் வெளியில் தயாரிக்கப்படும் முருக்கு, மிக்சர், பிஸ்கெட்டுகள், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வாறு அரசு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் பொருளை தயாரிக்கும் போது அதன் காலாவதி தேதி மற்றும் உற்பத்தி தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்த பாக்கெட்டில் உள்ள லெபிளில் எதுவும் குறிப்பிடுவதில்லை.

இது குறித்து நகராட்சி, சுகாதார துறையினர் மற்றும் மாவட்ட உணவு கட்டுப்பாடு அலுவலர்கள் எவரும் மாதக்கணக்கில் ஆய்வு செய்ய வராமல் உள்ளனர். இதனால் கடை உரிமையாளர்களின் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தனியார் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பண்டங்களை வாங்கி உண்ணும் போது ஒரு விதமான வாடை வருவதுடன், அவற்றின் சுவை தன்மை மாறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் உடல் உபாதைளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உணவு பொருள் கட்டுப்பாட்டு துறையினர் உடனடியாக ஆய்வு மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...