கோவை துடியலூரில் கஞ்சா விற்பனை - இளைஞர் கைது

கோவை துடியலூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது துடியலூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது, அவர் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பதும், கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து துடியலூர் பகுதியில் விற்றுவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், கைதான இளைஞரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...