ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகளை ஆளுங்கட்சி மீறுகிறது..! - தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹுவிடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.



சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது,



ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் ஆளும் திமுக அரசு ஜனநாயக அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டத்திற்கு யாரும் செல்ல கூடாது என்பதற்காக, அதை தடுக்க பல இடங்களில் சட்ட விரோதமாக பந்தல்கள் அமைத்து 1000 ரூபாய் பணம், உணவு கொடுத்தார்கள்.

இது திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. திமுக ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சிகாக முதலமைச்சர் மற்றும் அவர் மகன் தவிர மற்ற 30 அமைச்சர்களும் ஈரோட்டில்தான் முகாமிட்டு உள்ளனர். ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார். ஆளும்கட்சி கூட்டணி வேட்பாளர் தோற்கத்தான் போகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.



தொடர்ந்து, வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணம் என்பதால் அவர் சென்றார். ஆனால், பாஜக சார்பில் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் என்றும் தங்கள் கூட்டணியில் பிரச்சினை இல்லை என்றும் பதிலளித்தார்.

மேலும், இரட்டை இலை சின்னத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாகச் சொல்வது சரி அல்ல. ஈனத்தனமான பிறவிகள் இன்னும் மாறவில்லை. டிடிவி நன்றி கெட்டவர். சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை புரட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. பொய் சொல்வதற்கு அளவு உள்ளது.

தேர்தல் வாக்குறுதியை 85% நிறைவேற்றியதாக முதலமைச்சர் சொல்கிறார். கல்விக் கடன் ரத்து செய்தார்களா?, நீட் ரத்து செய்தீர்களா?, பயிர் நாசமானது பார்க்காமல் உள்ளனர். ஜனநாயக அமைப்பில் புகார் கொடுப்பது என்பது அடிப்படையான உரிமை. நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம். தேர்தல் கமிஷனுக்கு மேல் நீதிமன்றம் உள்ளது என்றார்.

ஆலந்தூர் காவலர் கொல்லப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு பாதுகாப்பு இல்லை. திரைப்படங்கள் போல தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் காவல் துறை என்றால் மிடுக்கு இருக்கும். இன்று அப்படி இல்லை. யார் அடிக்க போகிறார்கள் என்று உள்ளது. தர்ம அடி வாங்கும் காவல் துறையாக உள்ளது என்றும் அப்போது அவர் குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...