தாராபுரத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி விற்பனை மறைமுக ஏலம் மூலம் நடைபெற்றது.

இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 415 பேர் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் வந்திருந்து மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

அதில், பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8656-க்கும் குறைந்தபட்சவிலையாக ரூபாய்.6700-க்கும் சராசரி விலையாக ரூ 7850-க்கும் விற்பனையானது.

விற்பனையான பருத்தியின் மொத்த அளவு 3944 மூட்டைகள், குவிண்டால் 130.795. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 99,58,717 ஆகும்.

இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் பங்கேற்றதாக திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...