ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிரச்சாரம் செய்தால் பாஜகவிற்கு வாக்குகள் அதிகமாக விழும்..! - பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை

தமிழக அரசியலை பண்ணையார் அரசியலாக மாற்றியுள்ளனர். என்னைப் பொருத்தவரை சாமானியர்களின் அரசியலாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக இருப்பார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் சார்பில் 10 லட்சம் மரங்கள் நடும் தொடக்க நிகழ்ச்சி பாலவாக்கம் கடற்கரை அருகே நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று மரங்களை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.



இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, பாஜக சார்பில் வழங்கப்பட்ட நிதியில், இலங்கையில் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட கலாச்சார மையத்தின் திறப்பு விழா வரும் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த கலாச்சார மையத்தை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் மத்திய அரசின் சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார். அவருடன் நானும் செல்கிறேன்.

இந்த பயணத்தின் போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் 118 படகுகளை மீட்பது குறித்து அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக விழாவில் தமிழக பாஜக சார்பில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். அதிமுக வேட்பாளர் வெற்றி வேட்பாளராக மாறி வருவார் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நானும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வேன். இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வந்து ஆதரவு கேட்டு சென்றுள்ளார். பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.



இடைத்தேர்தலுக்கு முதலமைச்சர் பயந்து அனைத்து அமைச்சர்களையும் களம் இறக்கி உள்ளார். அதை பார்க்கும்போது திமுகவிற்கு பயம் வந்துள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

39 லோக்சபா எம்பிகளில் 38 திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றனர். அதில் ஒரே ஒரு வேட்பாளர் மற்றும் தோற்றுவிட்டார் அந்த வேட்பாளர்தான் ஈரோடு கிழக்கு தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர்.

ராகுல் காந்தி எங்களுடைய பிரச்சார பீரங்கியாக 2014, 2019 இருந்தார். அதே போல் 2023 ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அப்படித்தான் இருப்பார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்ணன் பேச ஆரம்பித்தால் எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டு வந்துவிடும். அவரே பேசுகிறார் ஆடியோவில் எங்கு பணத்தை கொடுக்கலாம் என்று. நான் பெரிய மனுஷன் என்று கூறிக் கொண்டவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்.

தமிழக அரசியலை பண்ணையார் அரசியலாக மாற்றியுள்ளனர். என்னைப் பொருத்தவரை சாமானியர்களின் அரசியலாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...