உதகையில் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் - வியாபாரிகள் போராட்டத்தால் பரபரப்பு!

உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி இருப்பதாகக் கூறி தொடர்ந்து சீல் வைத்து வரும் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து வியாபாரிகள் சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



நீலகிரி: உதகையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், நகராட்சி கடைகளுக்கு முன்பாக கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி தினசரி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் நடக்கடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான கடைகளுக்கு 90 சதவீத வாடகை தொகை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீத வாடகையை மார்ச் மாதம் இறுதிக்குள் செலுத்த வியாபாரிகள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

அதற்கு நகராட்சி ஆணையர் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் குறைந்தபட்ச வாடகை தொகை நிலுவையில் வைத்துள்ள கடைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

குறிப்பாக நேற்று ஒரே இரவில் 30 கடைகளுக்குச் சீல் வைத்தனர்.



இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், சீல் வைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறி சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே புதிய வாடகை முறையைத் தவணை முறையில் செலுத்தி வருவதாகவும், மார்ச் இறுதிக்குள் நிலுவையில் உள்ள வாடகையைச் செலுத்தி விடுவதாகக் கூறிய வியாபாரிகள், நகராட்சி சீல் வைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...