கோவை சின்னவேடம்பட்டியில் பள்ளி கட்டிட மராமத்து பணிகளை துவக்கி வைத்தார் மேயர் கல்பனா!

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 11 வது வார்டு சின்னவேடம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் புதிய கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியில் மாநகராட்சி பள்ளியில் கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு சின்னவேடம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில், புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில், புதிய பள்ளி கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதே போல மாநகராட்சி கல்விக்குழு மற்றும் 33 சதவீத தனியார் பங்களிப்போடு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகளின்மேற்கூரைகள் மாற்றம் உள்ளிட்ட மராமத்து பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...