உடுமலையில் கல்லூரி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோரிக்கை.
திருப்பூர்: அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், ஆர்.டி.ஓ. போலீஸ் துணை சூப்பிரண்டு, வட்டார போக்குவரத்து அலுவலர், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்லூரி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்.டி.ஓ. போலீஸ் துணை சூப்பிரண்டு, வட்டார போக்குவரத்து அலுவலர், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
உடுமலையிலிருந்து பொள்ளாச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு மாணவர்கள் அதிகமாகச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பேருந்து போக்குவரத்து போதுமான அளவு இல்லை.
இதனால் வேறு வழியில்லாத நிலையில் மாணவர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. திப்பம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரிக்கு முன்னால் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் தனியார் பேருந்துகளில் அதிகமான மாணவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 6ஆம் தேதி அன்று கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த மதன்லால் என்ற மாணவன் பொள்ளாச்சியிலிருந்து உடுமலைக்கு வந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். எனவே இது போன்ற விபத்துக்களைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிகப்படியான அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.
மேலும் பேருந்து பயணத்தின் போது படியில் பயணம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்.அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதாலும் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் வருவாய்க் கோட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகளும் காலை மற்றும் மாலை நேரங்களில் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து விபத்துக்களைத் தடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கி வரும் பேருந்துகள் மற்றும் அதன் ஓட்டுநர், நடத்துநர்கள், இயக்குநர்கள் மீது காவல்துறையினரும் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து விபத்து இல்லாத, மரணம் இல்லாத பயணத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.