ஹின்டர்பெர்க் அறிக்கையில் கேட்ட ஒரு கேள்விக்கு கூட அதானியால் பதில் அளிக்க முடியவில்லை..! - சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன் தகவல்

போலி நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து அதானி குழுமத்தை பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.



நாடாளுமன்றத்தில் அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்று, மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி ராமகிருஷ்ணன், மத்திய அரசின் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வளர்ச்சிக்கும் உதவாது. வறுமையையும் ஒழிக்காத பட்ஜெட் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நலன்களை பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதுகாக்கும் வகையில் பட்ஜெட்டில் அம்சங்கள் இடம்பெறவில்லை.

பாஜக 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடனேயே ஆண்டு திட்ட குழுவை கலைத்தார்கள். கிராமப்புற ஏழைகளுக்கும் விவசாய தொழிலாளிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை 33 சதவீதம் வரை இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைத்துள்ளார்கள்.

விவசாயிகளுக்கான உரமானியம், கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளுக்கே மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் நிதியை குறைத்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிகராக சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பை சரி நிகராக விதித்தால், தொழில் வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் 60 சதவீதம் இருக்கும் சிறுகுறு தொழில்கள் எப்படி செயல்பட முடியும்?

பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை அளிக்கும் அரசு என்பது அதானி மூலம் அம்பலப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹின்டர்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள 81 கேள்விகளுக்கு அதானி ஒரு கேள்விகளுக்குக்கூட பதில் அளிக்க இயலவில்லை. 

லெட்டர் பேட் கம்பெனிகளை வைத்து மோசடி செய்துள்ள அதானிக்கு எதிராக பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் அமலாக்க துறை ஏன் வாயை திறக்கவில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு செல்வ வரி மற்றும் வாரிசு வரியை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...