கோவை குனியமுத்தூரில் ஆசிரியையிடம் செயின் பறிப்பு - போலீசார் விசாரணை

கோவை குனியமுத்தூரில் பட்டப்பகலில் சாலையில் நடந்துச் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 4.5 சவரன் தங்கச்செயினை பறித்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு.


கோவை: குனியமுத்தூரில் பட்டப்பகலில் ஆசிரியையிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பி.கே புதூர் சாரதா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ரேணுகாதேவி. அரசுப்பள்ளி ஆசிரியர். இவர் தனது மகளை டியூசன் அழைத்துச் செல்ல ஜெயநகர் அருகே சாலையில் நடந்து சென்றார்.

அப்போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேணுகாதேவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 சவரன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர்.

அப்போது அவர் சத்தம் போட்டதால் அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக ரேணுகாதேவி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...