கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி, புதிய குளியல் தொட்டியில் உற்சாக குளியல்!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள குளியல் தொட்டியில் இறங்கிய கல்யாணி யானை உற்சாகத்துடன் குளியல் போட்டு மகிழ்ந்தது.



கோவை: பட்டீஸ்வரர் கோவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள யானை குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

கோவை பேரூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கல்யாணி யானை கடந்த 1996ஆம் ஆண்டு பேரூர் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டது. யானையைப் பாகன் ரவி பராமரித்து வருகிறார். இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. யானையைப் பார்க்கவே கோவிலுக்கு வரும் தனி கூட்டமும் இருக்கிறது.

கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகும் நிலையில், யானை குளிக்கவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து குளியல் தொட்டி அமைக்க பேரூர் கோவில் நிர்வாகத்தினர் பல பகுதிகளில் இடம் தேர்வு செய்து வந்தனர். இறுதியாக கோவிலுக்கு அடுத்துள்ள அங்காளம்மன் கோவில் பின் பகுதியில் சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டது.

இந்த பகுதியில் கல்யாணி யானை குளிக்க பெரிய அளவிலான குளியல் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.



இதனைத் தொடர்ந்து யானை குளியல் தொட்டி 4 அடி உயரத்திற்கு 1,20,000 லிட்டர்கள் கொள்ளளவில் அமைக்கப்பட்டது.



யானை குளியல் தொட்டி 10 மீட்டர் அகலம், 10 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் உயரம். யானை நடைபாதை 300 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம், யானை செல்லும் பாதையின் சாய்வு தளம் 12.40 மீட்டர் நீளம், 420 மீட்டர் அகலம் எனக் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது.



மேலும் குளியல் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் மோனோ பிளாக் மோட்டார் மற்றும் யானை குளிப்பதற்கு ஷவர் பொருத்தப்பட்டுள்ளது. யானைக்கு நிழற் குடையும் அமைக்கப்படவுள்ளது.

இதேபோல் அதே பகுதியில் யானை நடைப்பயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்று மண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு கல்யாணி யானை 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது. 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளது.



இந்த யானை குளியல் தொட்டியை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



அதன் பின்னர் யானை குளியல் தொட்டியில் இறங்கி நீரில் விளையாடி உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தது.



இதனை அப்பகுதியில் திரண்டவர்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...