தென்னம்பாளையம் உழவர் சந்தை கடைகளை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு? - திருப்பூரில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தையில் வியாபாரிகள் கடைகளை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துவதாக கூறி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை மற்றும் திருப்பூர் மாநகராட்சி காய்கறி சந்தையில் நீடித்து வரும் பிரச்சனைகளை சரி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளிக்கப்பட்டது.



இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக பிரச்சனைகளை சரி செய்ய வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். விவசாயிகளை அங்கு வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை, எனவே, வியாபாரிகள் சட்டவிரோதமாக நடத்தி வரும் காய்கறி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

திருப்பூர் பல்லடம் சாலையில் தென்னம்பாளையம் உழவர் சந்தை முதல் பேருந்து நிலையம் வரை சாலையின் இரு பக்கங்களிலும் உழவர் சந்தை நேரத்தில் வியாபாரிகள் சட்டவிரோதமாக காய்கறி கடைகளை நடத்தி வருகின்றனர்.

இதனை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டி இன்று திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



இதனிடையே, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...