ஈரோடு இடைத்தேர்தலில் திமுக 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்..! - அமைச்சர் முத்துச்சாமி நம்பிக்கை

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றுதான் திமுக விரும்புகிறது. யாரையும் தட்டிவிட்டு வெற்றிக்கோட்டை அடைய விரும்பவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்து பாஜக ஆதரவுடன் அதிமுக களம் இறங்கினாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிப் பெறும் - ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி.


ஈரோடு: அனல் பறக்கும் தேர்தல் பிரச்சார களமாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் திகழ்கிறது.



திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வாக்காளரிடம் தீவிரமாக வாக்கு சேகரித்துவருகின்றன. வெற்றியை நோக்கி ஒருபுறம் வாக்காளர்களை வேட்பாளர்கள் சந்திக்கும் நிலையில், மறுபுறம் தேர்தல் யுக்திகளை மையப்படுத்தி தொண்டர்களிடம் கூட்டங்களை கட்சி தலைமை நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணி தொடர்பாக திமுக ஆதிதிராவிட நலக்குழு செயல்வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசிய போது, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் 25 முதல் 30 சதவீதம் ஆதிதிராவிட மக்கள் உள்ளனர். இந்த சமூக மக்களின் வாக்குகள்தான் ஆட்சி மாற்றத்தை நிர்ணயிக்கிறது என்றார்.



பின்னர் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த 2016 ஆம் ஆண்டு வரை அருந்ததியினர் வாக்குகள் 85 சதவீதம் அதிமுக ஆதரவாக இருந்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த சமுதாய மக்களின் 85 சதவீதம் வாக்குகள் திமுகவுக்கு கிடைத்தது. இந்த தேர்தலில் 100 சதவீதமும் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். கலைஞர் ஆட்சி காலத்தில் அருந்ததியின மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள்ஒதுக்கீட்டால் அந்த சமுதாய மக்கள் அடைந்த பலனை வீடுவீடாகச் சென்று விளக்கி வாக்குச்சேகரிக்க வேண்டும் என்றார்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில், அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். யாரையும் தட்டிவிட்டு வெற்றிக்கோட்டை அடைய விரும்பவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்து பாஜக ஆதரவுடன் அதிமுக களம் இறங்கினாலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறுவோம். பிறரைக்காட்டிலும் வேகமாக ஓடி வெற்றிக்கோட்டை தொடுவோம் எனத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நாசர், சிவ.வி.மெய்யநாதன், ஆர்.அன்பரசன், சி.வி.கணேசன், ஆர்.ரகுபதி எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...