துடியலூர் அருகேயுள்ள முல்லை நகர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த தமிழரசன், அன்பரசன் மற்றும் சூரியா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திரவடிவேல் தலைமையில், போலீசார் துடியலூர் முல்லை நகர் விநாயகர் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அன்பரசன், சூரியா ஆகியோரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.