கோவை சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டை - இருவர் கைது..!

சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை காப்புக்காடு பகுதியில் மானை வேட்டையாடிய இருவரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சி மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: பெத்திக்குட்டை காப்புக் காடு பகுதியில் புள்ளி மானை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை காப்புக் காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருவர் ஆண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கொண்டு செல்வதை அறிந்து, உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.



பின்னர் அவர்களை வனத்துறை அலுவலகத்திற்கு, அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இருவரும் அம்மன் புதூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கூத்தாண்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் சுருக்கு கம்பி மூலம் மானை வேட்டையாடி இறைச்சியைக் கடத்தி செல்வதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து இறந்த ஆண் புள்ளி மானின் இறைச்சி, ஆயுதங்கள், பைக் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...