கோவையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த வாகனங்கள், சாலையோர வீட்டின் மீது மோதி விபத்து - ஒருவர் பலி

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதோடு, சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மீதும் மோதி நின்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.



கோவை: சேலம் மாவட்டத்தில் இருந்து கேரளா நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கோவை மதுக்கரை நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மற்றொரு லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது அந்த லாரி மோதியது.



அதிகபாரத்துடன் இருந்ததால் அடுத்ததடுத்து இரும்பு அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலை ஓரத்தில் வீட்டுடன் இருந்த கடை மீது அந்த லாரி பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த பாலத்துறையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரி ஓட்டுநர் பாஸ்கரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் அந்த வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...