கோவையில் குப்பை தரம் பிரிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.46க்குட்பட்ட பகுதியில் தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்துச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்துக் கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அறிவுரை வழங்கினார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, பழனியம்மாள் வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்துச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களிடம் அறிவுரை வழங்கிய பின்பு, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து, வார்டு எண்.48-க்குட்பட்ட சாஸ்திரி வீதியில் மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதையும், பையோ மைனிங் (திடக்கழிவு மேலாண்மை) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.



பின்னர், மேற்கு மண்டலம் வார்டு எண்.41-க்குட்பட்ட புது கிணறு வீதியினை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர், அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு, வார்டு எண்.41-க்குட்பட்ட பி.என்.புதூர், ஐஸ்வர்யா நகரில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் (TURIP 2022-2023)கீழ் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் 1.03 கிலோ மீட்டர் நீளத்திற்குத் தார்ச் சாலை அமையவுள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.38-க்குட்பட்ட மருத மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குக் குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு, வார்டு எண்.34-க்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகரில் IUDM திட்டத்தின்கீழ் ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் மழைநீர் வடிகால் கட்டுமானப்பணியை நேரில் பார்வையிட்டு, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மண்டலத்தலைவர்கள் மீனா லோகு (மத்தியம்), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள் பிரபா ரவீந்திரன், சாந்தி, பேபிசுதா ரவி, மண்டல உதவி ஆணையர்கள் மகேஷ்கனகராஜ், சேகர், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...