'அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும்..!' - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என தனித்தனியாக இல்லாமல் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும், பாஜக நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



அதிமுகவில் உள்ள தலைமை பிரச்சினை குறித்தும் இடைத்தேர்தல் குறித்து பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தமிழக பாஜக தலைமை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை தி.நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.



அப்போது பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியதாவது, 1972ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் தீய சக்திகளை வீழ்த்த அதிமுகவை உருவாக்கினார். இப்போதும் அதற்கான தேவை உள்ளது.

தமிழக மக்களுக்கு எதிராக திமுகவில் உள்ள ஒரு குடும்பம் செயல்பட்டு வருகிறது. தமிழ் மக்கள் திமுகவிற்கு எதிராக உள்ளனர். ஈரோட்டில் பணபலம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை திமுகவினர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக தேவை. ஈரோடு தேர்தல் தமிழக பிரச்சனைகள் குறித்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் என இருவரிடமும் கலந்து பேசினோம். இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிப்போம். இருவரும் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

இவ்வாறு அவர் பேசினார்.



இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, விலைவாசி உயர்வால் மக்களிடம் திமுக கெட்ட பெயர் எடுத்துள்ளது.

ஈரோடு கிழக்கு தேர்தலில் தமிழக பாஜகவின் தற்போது நிலைப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பதிலளித்த அண்ணாமலை, பிப்ரவரி 7ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் உள்ளது. அதுவரை பொறுத்திருங்கள் என்றார்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பாஜவிடமிருந்து எந்தவொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்ற கேள்விக்கு, அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என தனித்தனியாக இல்லாமல் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...