கோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர், பள்ளி மாணவி தற்கொலை? - போலீசார் விசாரணை

சூலூர் அடுத்த ராசிபாளையம் அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவர், பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், தற்கொலையா என போத்தனூர் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவன் மற்றும் பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர் அடுத்த அன்னமடை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜய்(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது நண்பர் ராஜ்குமார் என்பவர் உடன் ராசிபாளையம் வரை செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து ராஜ்குமாரின் இருசக்கர வாகனத்தில் இருவரும் ராசிபாளையம் நோக்கி சென்றுள்ளனர்.

ராசிபாளையம் ரயில்வே கேட் அருகே வந்தபோது, வண்டியை நிறுத்த சொல்லி கீழே இறங்கிய அஜய், ஒருவரை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, அங்கிருந்த தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.

இரண்டு மூன்று ரயில்கள் கடந்து சென்ற பின்னரும் அஜய் வராததால், சந்தேகமடைந்த நண்பர் ராஜ்குமார் தண்டவாளம் அருகே சென்ற போது, அஜய்-யும் மற்றும் பெண்ணும் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமாரின் கூச்சல் சத்தம் கேட்டு, அங்கிலிருந்தவர்கள் சென்று பார்த்த போது இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றினர்.

விசாரணையில் இறந்த பெண், ராசி பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரது உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று மாலை தனது தோழியுடன் படிப்பதற்காக சென்ற பள்ளி மாணவி, தண்டவாளத்தில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது, தண்டவாளத்தில் அமர்ந்து பேசும் போது ரயிலில் மோதி உயிரிழந்தனரா என போத்தனூர் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலில் அடிப்பட்டு கல்லூரி மாணவரும், பள்ளி மாணவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...