உடுமலையில் வெண்டைக்காய் சாகுபடியில் அசத்தல் - விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மூலம் வெண்டைக் காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நிறைந்த வருமானம் ,சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சல், மதிப்புக் கூட்டுப்பொருளாக மாற்றுவது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆனால், தென்னை சாகுபடி ஆண்டு பயிர் என்பதால் வறட்சியான காலங்களில் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்தி குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஆண்டு முழுவதும் குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி, மிளகாய், வெண்டை ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில், சந்தையில் அதிக அளவு விற்பனை ஆகும் பயிராக வெண்டைக்காய் அண்மைக்காலமாக இருந்துவருகிறது.



மேலும், சாம்பார், பொரியல், புளிக்குழம்பு உள்ளிட்ட சைவ உணவுகளில் வெண்டைக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இவற்றின் தேவை அதிகமாக உள்ளது. சமீப காலமாக சர்க்கரை நோயாளிகள் இந்த வெண்டைக்காயை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனவே, இந்தப் பகுதி விவசாயிகள் தற்போது வெண்டைக்காயை தனிப்பயிராக பயிரிட்டு விற்பனையில் அதிக வருமானம் ஈட்டி அசத்திவருகின்றனர்.



வெண்டைக்காயை பொருத்தவரை வரத்து குறைவால் கிலோ ரூ. 40 முதல்50 ரூபாய் என விலை விற்பனையாகிறது. அதுமட்டுமின்றி, மொத்த வியாபாரிகள் இவற்றை வாங்கி, கோவை மதுரை சேலம் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வதால் விற்பனை வாய்ப்பு அதிகரித்து, வருவாயும் கூடியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...