பிப்.18ல் கோவை திரும்பும் ஆதியோகி ரத யாத்திரை - ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு!

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தரிசனத்திற்காக சென்றுள்ள ஆதியோகி ரத யாத்திரை, பிப்ரவரி 18ம் தேதி வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரிக்கு கோவை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: உலகில்‌ தோன்றிய முதல்‌ யோகியான சிவன்‌ சப்தரிஷிகளுக்கு (அகத்தியர்‌ உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம்‌ முழுவதையும்‌ பரிமாறினார்‌. சப்தரிஷிகள்‌ ஒவ்வொருவரும்‌, அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன்‌ உலகின்‌ பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர்‌. இது ஆன்மீகத்தில்‌ மாபெரும்‌ அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.

யோகா கலாச்சாரம்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவுதற்கு முழுமுதற்காரணமாக இருக்கும்‌ ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும்‌ விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்‌ 112 அடியில்‌ ஆதியோகியின்‌ மார்பளவு திருவுருவம்‌ சத்குரு அவர்களால்‌ 2017-ம்‌ ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆதியோகியை தரிசித்து அவரின்‌ அருளை பெறுவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து ஆயிரக்கணக்கான மக்கள்‌ தினமும்‌ வருகை தருகின்றனர்‌.

இந்நிலையில்‌, கோவையில்‌ செயல்படும்‌ தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும்‌ ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாமல்‌ இருக்கும்‌ மக்கள்‌ தங்கள்‌ ஊர்களிலேயே அவரை தரிசிப்பதற்கு இந்த யாத்திரை வாய்ப்பளித்துவருகிறது.

அதன்படி, 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன்‌ கூடிய இந்த ரதங்கள்‌ தமிழகத்தின்‌ 4 திசைகளிலும்‌ பயணித்து கொண்டு இருக்கின்றன. கோவையில்‌ இருந்து கடந்த மாதம்‌ புறப்பட்ட 5 ஆதியோகி ரதங்கள்‌ 30-க்கும்‌ மேற்பட்ட மாவட்டங்களில்‌ சுமார்‌ 25 ஆயிரம்‌ கி.மீ பயணித்து மஹாசிவராத்திரியன்று மீண்டும்‌ கோவைக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 18-ம்‌ தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும்‌, அந்தந்த மாவட்டங்களிலும்‌ நடைபெறும்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வருமாறு பொதுமக்களுக்கு இந்த யாத்திரையின்போது அழைப்பு விடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...