வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


கோவை:கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், காலில் ஏற்பட்ட புண் காரணமாக சிகிச்சை பெற்று வந்த வானதி சீனிவாசன், பூரண குணமடைந்து நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, இன்று ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு வானதி சீனிவாசன் வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து நேரடியாக தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையத்தில் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து அவரை வீட்டிற்குள் வரவேற்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உடல்நலம் தேறி வீடு திரும்பிய வானதி சீனிவாசனுக்கு உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் வீட்டிலுள்ள பூஜை அறையில் சாமி கும்பிட்டு வேண்டுதல் நிறைவேற்றினார். அவரது பூரண நலனுக்காக குடும்பத்தினரும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

சிகிச்சைக்குப் பிறகு விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை தர உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வானதி சீனிவாசன் வீடு திரும்பியது பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...