கோவை ஆலாந்துறை வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்!

ஆலாந்துறை வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறையில் உள்ள பழமை வாய்ந்த வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைபெற்றது.



ஆலாந்துறை பகுதியில் உள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமையான வேட்டைக்காரன் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.



இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று மிக விமரிசையாக நடைபெற்றது.

ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய வேதங்களை உள்ளடக்கிய வேதமான தேவ வேத முறைப்படி இந்த கும்பாபிஷேக விழாவானது கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

இதனையடுத்து மங்கள இசையுடன் யாகசாலை மூர்த்தங்கால் நடுதல், கணபதி ஹோமம், தீபாவளனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து புனித தீர்த்தம், புனித மண் எடுத்தல் முளைப்பாரி அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மேளதாளத்துடன் நடைபெற்றது.



இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பல்வேறு விதமான பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று காலை சுமார் 9 மணி அளவில் கும்பாபிஷேகம் நிகழ்வானது ஸ்தபதி சுரேஷ் சாஸ்திரி தலைமையில் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி அன்பரசன் ஆகியோர் தலைமையில் கடந்த நான்கு நாட்களாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...