கோவையில் கணபதி, சின்னவேடம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த 5 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 2.7 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோயமுத்தூரில் கஞ்சா விற்பனை செய்கின்ற போதை பொருள் விற்பனையாளர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
அதன் அடிப்படையில், சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணகுமார், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் செல்லமணி, காவலர்கள் நந்தகுமார், பிரகாஷ் ,தினேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவந்தது.
இந்த நிலையில், கணபதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், அங்கு தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணபதி அருணாச்சல கவுண்டர் வீதியில் உள்ள மாரியப்பன் என்பவரது மகன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கஞ்சாவை தனிப்படையினர் கைப்பற்றினர்.
இது தொடர்பாக, மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரது மகன் முகி என்கின்ற முகேஷ் கண்ணா(வயது 22) மற்றும் ஜெயக்குமார் (வயது25) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார். அவர்களை கைது செய்தனர்.
இதேபோல், சின்னவேடம்பட்டி பகுதியில் சரவணம்பட்டி போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதி சேர்ந்த மயில்வாகனம் என்பவரது மகன் மனோஜ் குமார் (வயது22), முருகன் என்பவரது மகன் விமல் குமார் (வயது24), நாகராஜ் என்பவரது மகன் முரளி (வயது30) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்களிடம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனை தொடர்பாக பிடிபட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.